

சென்னை: குற்றச்செயல்களில் ஈடுபட்ட 45 ரவுடிகள் உட்பட 84 பேர் சென்னையில் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பவர்களை போலீஸார் கண்காணித்தனர். சிறப்பு வாகன சோதனையும் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபட்ட 45 ரவுடிகள் உட்பட 84 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 5.25 கிலோ கஞ்சா, 3.5 கிராம் மெத்தம்பெட்டமைன், 2.6 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.