

மாமல்லபுரம்: கல்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருபவர் மணிமாறன். இவர், பள்ளியில் பயிலும் 13 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறி, சிறுமியின் உறவினர்கள் நேற்று ஈசிஆரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதீஸ்வரன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து மறியல் கைவிட்டப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
மேலும், ஆசிரியரை கைது செய்து மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனால், ஈசிஆரில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.