

பொன்னேரி: சோழவரம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். சோழவரம் அருகே கண்டெய்னர் லாரி பார்க்கிங் யார்டில் கடந்த 9-ம் தேதியன்று மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து சோழவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் மலையடி புதூரைச் சேர்ந்த சுரேஷ், திருக்குறுங்குடி சுந்தர், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் முத்துமனோகர், துரைப்பாண்டி என்கிற தினேஷ் ஆகிய 4 பேர், நேற்று தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜேஎம்-2 நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.