தேவகோட்டை அருகே நில மோசடி வழக்கில் திமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட (இடமிருந்து) கார்த்திகேயன், கருப்பையா, ராமநாதன்.
நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட (இடமிருந்து) கார்த்திகேயன், கருப்பையா, ராமநாதன்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே போரிவயலைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் மரணமடைந்த நிலையில், அவரது பெயரில் உள்ள 5 ஏக்கர் 22 சென்ட் நிலத்தை விற்க அவரது மகன் காளிமுத்து முயற்சி செய்தார்.

அப்போது அந்த நிலம், புதுவயலைச் சேர்ந்த நைனா முகமது என்பவரது பெயரில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காளிமுத்து, டிஎஸ்பி கணேசகுமார், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திடம் புகார் கொடுத்தார்.

போலீஸார் விசாரணையில், போலி ஆவணம் தயாரித்து நிலத்தை ரூ.22 லட்சத்துக்கு நைனா முகமதுவுக்கு சிலர் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து வேலாயுதப்பட்டினம் எஸ்ஐ முத்துபால் வழக்குப் பதிந்து போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக ஆறாவயலைச் சேர்ந்த தேவ கோட்டை திமுக வடக்கு ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ராமநாதன், அச்சணியைச் சேர்ந்த கருப்பையா, கல்லலைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்தார். மேலும் இரு வரை தேடி வருகின்றனர்.

இதில் கார்த்திகேயன் கல் லலில் கணினி மையம் நடத்தி வந்தார். அவர்தான் வெங்கடாசலம் பெயரில் போலி ஆதார் கார்டை தயாரித்து கொடுத்துள்ளார். இதை பயன்படுத்திதான் பத்திரப்பதிவு செய்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in