Published : 11 Aug 2022 07:05 AM
Last Updated : 11 Aug 2022 07:05 AM

விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில் பிளஸ் - 2 மாணவி தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் அருகேயுள்ளது மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் பிளஸ் - 2 பயிலும் மாணவி ஒருவர் நேற்று வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவியை ஆட்டோ மூலம் காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் பற்றி போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு: உயிரிழந்த மாணவி இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, உறவினர் ஒருவருடன் திருமணம் பேசி அதற்கு நிச்சயம் செய்ய, அடுத்த வாரம் தேதி குறித்துள்ளனர். அதன் காரணமாக மாணவி மனமுடைந்து வீட்டிலேயே பூச்சிமருந்து குடித்துவிட்டு, பள்ளிக்கு வந்து இறந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x