ராஜபாளையம் தம்பதி கொலையில் துப்பு கொடுத்தால் ரூ.10000 பரிசு: காவல் துறை அறிவிப்பு

ராஜபாளையம் தம்பதி கொலையில் துப்பு கொடுத்தால் ரூ.10000 பரிசு: காவல் துறை அறிவிப்பு
Updated on
1 min read

ராஜபாளையத்தில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது.

ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (75). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பின் ராஜபாளையம் பகுதியில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 16-ம் தேதி இரவு ராஜகோபால் மற்றும் அவரது மனைவி குருபாக்கியம் (68) இருவரும் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இச்சம்பவம் குறித்து மதுரை டிஐஜி பொன்னி நேரடியாக விசாரணை நடத்தி, அவரது மேற்பார்வையில் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதுவரை இந்த வழக்கு தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியும் கொலையாளிகளை பிடிக்க முடியவில்லை. கடந்த வாரம் ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக நேரடி டிஎஸ்பி பிரீத்தி நியமிக்கப்பட்டார்.

இக்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து 98842 15769, 94981 33325 ஆகிய மொபைல் எண்களில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என டிஎஸ்பி பிரீத்தி அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in