

புதுச்சேரி மரப்பாலம் நூறடி சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பெற்றோரின்றி பாதுகாவலர் உதவியுடன் படிக்கும் மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தைச் சேர்ந்த ஆசிரியர் டோனி (எ) சகாய டோனி வளவன் (41) கடந்த 2 மாதங்களாக ஆபாச செய்திகள், படங்களின் லிங்குகளை அனுப்பி,பாலியல் தொல்லை கொடுத்துவந்ததோடு மிரட்டல் விடுத்ததாக வும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி தனது பாதுகாவலரிடம் தெரிவித் துள்ளார். மேலும் இதுதொடர்பாக சமூக அமைப்புகளிடம் தெரிவிக்கப்பட்டது. சமூக அமைப்பைச் சேர்ந்தோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு வுக்கு புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில் பள்ளி மாண விக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கைஎடுக்கக்கோரி குழந்தைகள் நலக்குழுவினர் சார்பில் முதலியார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீ ஸார் ஆசிரியர் சகாய டோனி வளவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே ஆசிரியர் சகாய டோனி வளவன் தனியார் பள்ளியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.