தளி அருகே ஊராட்சித் தலைவர் கொலை

நரசிம்மமூர்த்தி
நரசிம்மமூர்த்தி
Updated on
1 min read

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பி.பி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (44). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட குழு உறுப்பிரான இவர், தாரவேந்திரம் ஊராட்சித் தலைவராக இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர் தளியில் இருந்து பைக்கில் பி.பி.பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரை வழி மறித்து கட்டை மற்றும் கல்லால் தாக்கி விட்டு தப்பினர்.

இதில், நரசிம்மமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக தளி போலீஸார் 5 பேரிடம் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in