Published : 04 Aug 2022 07:03 AM
Last Updated : 04 Aug 2022 07:03 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மாமனாரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மருமகனை மறைமலை நகரில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு அருகே பொன் விளைந்த களத்தூர் - அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் துலுக்கானம் (60). அவரது மனைவி சம்பூரணம் (56). அவரது இரண்டாவது மகள் ஜெயந்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகன் டார்ஜன் (34). என்பவருக்கும் திருமணமாகி ஓர் ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிவரும் டார்ஜன் அடிக்கடி தன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதை தட்டிக்கேட்ட மாமியார், மாமனாரை கட்டையால் தாக்கிவிட்டு மருமகன் டார்ஜன் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த செங்கல்பட்டு தாலுக்கா போலீஸார் தப்பியோடிய டார்ஜனை தீவிரமாக தேடி வந்தனர். அவர் மறைமலை நகர் - இந்திரா நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருப்பது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற தாலுகா போலீஸார் அங்கு பதுங்கியிருந்த டார்ஜனை மடக்கி பிடித்து கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT