

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த ஜமீன் எண்டத்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் மேல்மருவத்தூர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே 10-ம் வகுப்பு பயிலும் 14 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக, மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், மேல்மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஜமீன் எண்டத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்துரு (24) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.