கோவை | மோசடி புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ஜோதிடர் தற்கொலை முயற்சி; தாய் உயிரிழப்பு

கோவை | மோசடி புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ஜோதிடர் தற்கொலை முயற்சி; தாய் உயிரிழப்பு
Updated on
1 min read

கோவை: இடப்பிரச்சினையை தீர்ப்பதாக கூறி நகை, பணம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், குடும்பத்தோடு ஜோதிடர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதில், அவரது தாய் உயிரிழந்தார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கருப்பையா(45). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், கோவை செல்வபுரம் போலீஸில் சமீபத்தில் புகார் அளித்தார்.

அதில், “எனக்கு சொந்தமான காலியிடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ளது. அந்த இடத்தில் பிரச்சினை இருந்தது. கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த ஜோதிடரும், இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணைத் தலைவருமான பிரசன்னா(41), இடப்பிரச்சினைகளை தீர்த்து தருவதாக கூறினார்.

இதை நம்பிய நான், கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு தவணைகளில் ரூ.25 லட்சத்து 59 ஆயிரம்மற்றும் 15 பவுன் தாலிச் சங்கிலிஆகியவற்றை பிரசன்னாவிடம் கொடுத்தேன்.

ஆனால், இடப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். அதன்பேரில் செல்வபுரம் போலீஸார் பிரசன்னா, அஸ்வினி, ஹரிபிரசாத், பிரகாஷ் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், விசாரணைக்கு பயந்து பிரசன்னா, மனைவி, மகள்,தாயாருடன் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் நால்வரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தாயார் கிருஷ்ணகுமாரி (65) உயிரிழந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in