பொள்ளாச்சி | சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

பொள்ளாச்சி | சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது
Updated on
1 min read

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சட்டவிரோதமாக பணம் வைத்து சேவல் கட்டு எனப்படும் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில், போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ஜமீன் காளியாபுரத்தில் லோகநாதன் என்பவரது தோட்டத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் சென்று, சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொள்ளாச்சி, வடக்கிபாளையம், கிணத்துக்கடவு, கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 14 பேரை பிடித்தனர்.

அவர்களிடமிருந்து கார், சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனம் என 36 வாகனங்கள், சூதாட்டத்தில் பயன்படுத்தபட்ட 30 சேவல்கள், ரூ.13,360 பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 14 பேர் மீதும் வழக்கு பதிந்து வடக்கிப்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in