இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் 9 பேர் சிறையில் அடைப்பு

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் 9 பேர் சிறையில் அடைப்பு
Updated on
1 min read

உடுமலை ஏரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் குமரவேல் (26). இந்து முன்னணி வடக்கு நகர செயலாளராக இருந்தார். அதே பகுதியில் தம்பதிகளான பிரவீன் - வளர்மதி, ரஞ்சித்-கவிதா ஆகியோர் வசித்து வந்தனர்.

சுய உதவிக்குழு மூலம் கவிதாவுக்கு,வளர்மதி கடன் பெற்றுத்தந்துள்ளார். கடனை கவிதா திருப்பி செலுத்தவில்லை. இது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை இருந்து வந்தது. இவ்விவகாரத்தில் பிரவீன் தரப்புக்கு ஆதரவாக குமரவேல் இருந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்- கவிதா தம்பதி வாடகை வீட்டை காலி செய்ய முயன்றனர்.

இதையறிந்த குமரவேல், அவர்களை தடுத்தார். அப்போது ரஞ்சித்தும், அவர்களது நண்பர்களும் சேர்ந்து இரும்புக் கம்பியால் தாக்கியதில் குமரவேல் உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய ஆதியப்பன் (43), சிவானந்தம்(30), செந்தில்(31), மாரியான் (34), ஜான்சன்(31), ஆனந்தகுமார் (27), செல்வம்(23), ஹரிசாந்த் (21), அமர்நாத் பாலு(30) ஆகிய 9 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் பரிந்துரையின் பேரில் 9 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கான நகல்களை, சிறையில் உள்ள 9 பேரிடமும் போலீஸார் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in