

கரூர் தாந்தோணிமலை வாஞ்சிநாதன் நகரைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரிடம், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ரங்கநாதன், ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கருப்பண்ணன் மூலம் 45 பேரிடம் ரூ.2.07 கோடி பெற்றுக் கொண்டு, தனது வங்கிக் காசோலையை அவர்களிடம் ரங்கநாதன் அளித்துள்ளார். அதன்பிறகு, ரங்கநாதன் யாருக்கும் வேலை வாங்கித் தராததுடன், பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கரூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் கருப்பண்ணன் அண்மையில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். ரங்கநாதன் உயிரிழந்துவிட்ட நிலையில், போலீஸார் நேற்று முன்தினம் ரங்கநாதன் மகள் ஆனந்தி, ரமேஷ், கருப்பண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.