

விழுப்புரம்: சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக, பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் சிபிசி ஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் உயிரிழந் தார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம் எழுப்பி இருந்த நிலை யில், கடந்த 17-ம் தேதி அந்தப் பள்ளியில் பெரும் கலவரம் வெடித் தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக் கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்த தனி யார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன்,ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா ஆகிய 5 பேரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாள்நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில், சேலம் மத்திய சிறையில் 5 பேரும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இவர்கள் 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு மீதான விசாரணை விழுப்புரத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற் றது. அப்போது சின்னசேலம் காவல் நிலையத்தில் பதிவு செய் யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக் கையை கொண்டு ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் சென்று விட்டதால் சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை கொண்டு ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய பள்ளி தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி சாந்தி அறிவுரை வழங்கினார்.
அப்போது, முதல் தகவல் அறிக்கை விவரங்களை சிபிசிஐடி போலீஸார் தங்களுக்கு வழங்க மறுப்பதாக பள்ளி நிர்வாகத் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். இதையடுத்து மாணவி மரணம் தொடர்பான வழக்கு விவரங்களை சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், பள்ளிதாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முதல் தகவல் அறிக்கை விவரங்களை சிபிசிஐடி போலீஸார் தங்களுக்கு வழங்க மறுப்பதாக பள்ளி நிர்வாகத் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.