Published : 30 Jul 2022 06:30 AM
Last Updated : 30 Jul 2022 06:30 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்க நகையை ஏலம் எடுத்துத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.30 ஆயிரத்தை ஏமாற்றிப் பறித்த நபரை போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.
சிவகங்கை அருகே காஞ்சிரங் காலைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் கடந்த மாதம் தனது சொந்த வேலையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப் போது அவரை அணுகிய ஒருவர், தான் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகக் கூறினார்.
பிறகு அந்த நபர், ‘ஆட்சியர் அலுவலகத்தில் வங்கிகளில் அடமானம் வைத்துத் திருப்ப முடியாத தங்க நகைளை ஏலம் விடுகின்றனர். அதைக் குறைந்த விலைக்கு வாங்கலாம். தற்போது 2.5 பவுன் ஏலத்துக்கு வந்துள்ளது. ரூ.30 ஆயிரம் கொடுத்தால் போதும், என ராஜேஸ்வரியிடம் தெரிவித்தார்.
இதை நம்பிய ராஜேஸ்வரி கடந்த மாதம் 27-ம் தேதி அந்த நபரிடம் ரூ.30 ஆயிரம் கொடுத் தார். ஆனால், சொன்னபடி அந்த நபர் நகை வாங்கித் தராமல் தலைமறைவானதால் தான் ஏமாற்றப்பட்டதை ராஜேஸ்வரி உணர்ந்தார்.
இதையடுத்து அவர் சிவகங்கை குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் தலைமையிலான போலீ ஸார் ஏமாற்றிய நபர், மீண்டும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகி றாரா என்பதைக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று வந்த அந்த நபரை போலீஸார் பிடிக்க முயற்சித்தபோது அந்த நபர் தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விரட்டிப் பிடித்தனர்.
விசாரணையில், அந்த நபர் காரைக்குடி சிவானந்த நகரைச் சேர்ந்த சங்கர் (34) என தெரிய வந்தது. அவர் இதேபோல் காரைக் குடி பகுதியிலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவரிடம் போலீ ஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT