மதுரை பெண்ணின் புகாரால் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

மதுரை பெண்ணின் புகாரால் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Published on

விளாத்திகுளம் காவல் நிலை யத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்தவர் ஆனந்த தாண்டவம் (50).

இவர் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் 2019-ம் ஆண்டு பணிபுரிந்தபோது, சொத்து பிரச்சினை தொடர்பாக கோமதி (42) என்பவர் புகார் அளித்துள்ளார்.

இதை விசாரித்த ஆனந்த தாண்டவத்துக்கும், கோமதிக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் இணைந்து வாழ்ந்தனர். அப்போது ஆனந்த தாண்டவம், கோமதியிடம் ரூ.6 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மன உளைச்சலுக்கு உள்ளான கோமதி 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும், ஆனந்த தாண்டவம் மீது கடந்த ஏப்ரல் மாதம் டிஜிபி அலுவலகத்தில் புகார் செய்தார்.

துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டதில் ஆனந்த தாண்டவம் மீதான புகாரில் குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவத்தை இடை நீக்கம் செய்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in