Published : 26 Jul 2022 04:05 AM
Last Updated : 26 Jul 2022 04:05 AM

தாராபுரம் அருகே குடும்ப வறுமையால் மகளை கொன்று தாயும் தற்கொலை

உடுமலை தாராபுரத்தை அடுத்த அலங்கியம், காமராஜர் நகரை சேர்ந்தவர் பூங்கொடி (28). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். 10 வயது மகளுடன் வசித்து வந்த பூங்கொடி, தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் அரசு பணிக்கான குரூப் 4 தேர்வுக்கு படித்து வந்துள்ளார். வேலைக்கு செல்லாததால் குடும்பத்தில் பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. மன உளைச்சலுக்கு ஆளான அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகளை தூக்கிலிட்டு கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டார்.

இதற்கிடையே வெளியில் சென்றிருந்த அவரது தாயார் சரஸ்வதி வீட்டுக்கு திரும்பியபோது இருவரும் தூக்கிட்டு இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் போலீஸார் சென்று சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அலங்கியம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x