Published : 24 Jul 2022 05:49 AM
Last Updated : 24 Jul 2022 05:49 AM

டெல்லி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை - ரயில்வே ஊழியர்கள் 4 பேர் கைது

புதுடெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

நான் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வசிக்கிறேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர் மூலம் மற்றொருவர் அறிமுகமானார். அவர் தன்னை ரயில்வே ஊழியர் என்றும், எனக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து தொலைபேசியிலேயே எங்கள் நட்பு வளர்ந்தது.

இந்நிலையில் கடந்த 21-ம் தேதி தனது மகனுக்கு பிறந்த நாள் என்பதால் விருந்து தருவதாகக் கூறி என்னை 2 பேரும் அழைத்தனர்.

டெல்லி ரயில் நிலையத்துக்கு இரவு 10.30 மணிக்கு என்னை அழைத்து வந்தனர். அங்குள்ள 8, 9-வது பிளாட்பாரத்தில் உள்ள ரயில்வே மின் பராமரிப்பு அறைக்கு என்னை அழைத்துச்சென்று 2 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதற்கு காவலாக 2 ரயில்வே ஊழியர்கள் அறைக்கு வெளியே நின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து 4 ஊழியர்களை ரயில்வே போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x