

மதுரை சொக்கலிங்க நகரைச் சேர்ந்தவர் நாக ராஜன்(56), இவரது மனைவி குருவம்மாள்(50). இவர் கள் வடைக்கடை வைத்திருந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் திருமணம் முடிந்து வடைக்கடையில் வேலை செய்கிறார். 2-வது மகன் மாரிச்செல்வம்( 26) குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வீட்டிலேயே இருந்துள்ளார்.
மேலும் அவர் வீட்டி லிருந்து அடிக்கடி பணத்தைத் திருடி குடிப்பதும், தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரை தாக்கி துன்புறுத்தியும் வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்த மாரிச்செல்வம், பெற்றோரை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர், போதையில் மயங்கிய நிலையிலிருந்த மாரிச்செல்வத்தின் கழுத்தை கயிற்றால் நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் சரண் அடைந்த இரு வரையும் போலீஸார் கைது செய்தனர்.