

கடலூர்: நெய்வேலி அருகே பட்டப்பகலில் வீட்டை உடைத்து 40 பவுன் நகை திருடப்பட்டது.
நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து ஊராட்சி அருட்பெருஞ்ஜோதி நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தற்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
அவரது குடும்பத்தினர் அருட்பெருஞ்ஜோதி நகரில் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பாலமுருகன் மனைவி கோமதி நெய்வேலிக்கு சென்றுள்ளார். குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளன. அவரது மாமனார் நீலகண்டன் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றார்.
நீலகண்டன் வீட்டிற்கு திரும்பி வந்த போது, வீட்டின் முன்பக்க இரும்பு கதவு உடைக்கப்பட்டது இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.
பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சாகுல் அமீது, உதவி ஆய்வாளர் ஆதி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருடர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.