Published : 21 Jul 2022 07:17 AM
Last Updated : 21 Jul 2022 07:17 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் , மரக்காணம் அருகே உள்ள வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகதாஸ், (45), வெங்கடேசன் (44), சுப்பிரமணி (38). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு முயல் வேட்டைக்குச் சென்றனர்.
அந்தப் பகுதியில் காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த அதே ஊரைச் சேர்ந்த விவசாயி சடகோபன் என்பவர் தனது நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார்.
இதனை கவனிக்காமல் 3 பேரும் சடகோபனின் நிலத்தை கடக்கும்போது மின்வேலியில் சிக்கினர். இதில் மின்சாரம் தாக்கி 3 பேரும் உயிரிழந்தனர். பிரம்மதேசம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, 3 பேரின் உடல்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவசாயி சடகோபனை கைது செய்தனர்.
முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
இந்நிலையில், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT