பழவேற்காடு பகுதியில் கிளினிக் நடத்திய போலி மருத்துவர் சிக்கினார்

பழவேற்காடு பகுதியில் கிளினிக் நடத்திய போலி மருத்துவர் சிக்கினார்
Updated on
1 min read

பழவேற்காட்டில் மருத்துவம் படிக்காதவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கு புகார்வந்தது.

அதன்பேரில், நேற்று முன்தினம் அந்த கிளினிக்கில் பழவேற்காடு அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் முகமது பாத்திமா உள்ளிட்ட உயரதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் மருத்துவராக செயல்பட்டு வந்த ராஜேந்திரன் பிளஸ் 2 மட்டுமே படித்தவர் என்பதும் நீண்டகாலமாக இந்தக் கிளினிக்கை நடத்தி ஆங்கில மருத்துவ முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சைகளை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த ஆங்கில மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, முதன்மை மருத்துவர் முகமது பாத்திமா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருப்பாலைவனம் போலீஸார், ராஜேந்திரனை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in