

உடுமலை: தாராபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (35), வீரன் (48), யாசர் அராபத் (25) ஆகியோர் இணைந்து நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்களிடம் தாராபுரம், கே.எஸ்.கே.நகரை சேர்ந்த அருண்குமார் (36), வாடகை வாகனங்கள் வாங்குவதற்காக கடன் பெற்றுள்ளார். கடன் தவணையையும் திருப்பி செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பேருந்து ஒன்றை விற்பனை செய்து கடன் தொகையை முழுவதும் செலுத்திவிட்ட நிலையில், மேலும் தவணை பாக்கி இருப்பதாக கூறி 3 வாகனங்களை நிதி நிறுவனத்தினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கடனை திருப்பி செலுத்த கோரி, வீட்டில் இருந்த அருண் குமாரின் தந்தையையும் தாக்கியுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீஸார் வழக்கு பதிந்து, வீரன் (48), யாசர் அராபத் ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவான முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.