

கொடைக்கானலில் போதை காளான் விற்றதாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து 'மேஜிக் மஸ்ரூம்' என்ற போதைக் காளான் சில ஆண்டு களாக விற்கப்படுகிறது. இதைத் தடுக்க, மாவட்ட போலீஸார், போதைப் பொருள் தடுப்பு நுண் ணறிவு பிரிவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கொடைக்கானல் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது போதைக் காளான் விற்றதாக பூண்டியைச் சேர்ந்த சத்தியராஜ் (30), மன்னவனூரைச் சேர்ந்த வைரவேல்(30), லட்சுமணன் (38), சரத்குமார் ( 60), குணசேகரன் (52), மதன்குமார் (24) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்து 2 கிலோ கஞ்சாவையும் பறி முதல் செய்தனர்.