

புதுச்சேரி வெள்ளாளர் வீதியிலுள்ள ஒரு ஸ்பாவில் பாலியல்தொழில் நடப்பதாக போலீஸா ருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமை யிலான போலீஸார் நேற்று மாலை அந்த ஸ்பாவுக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்பாஉரிமையாளரான முத்தியால் பேட்டை சோலை நகர் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த தனசேகரன் மனைவி ஷீலா (32), வாடிக் கையாளர்களாக வந்திருந்த சுற்றுலா பயணிகளான திருவனந் தபுரம் அதிதி (31), கண்ணூர் தலிபரம்பியா பகுதியைச் சேர்ந்த ராகேஷ்(31) ஆகியோரை கைது செய்தனர்.
அங்கிருந்த 5 பெண்களை மீட்டனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஸ்பா உரிமையாளர் ஷீலாஉள்ளிட்ட 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர். மீட்கப்பட்ட பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.