

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பாச்சேத்தி அருகே பிச்சைப்பிள்ளையேந்தலில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கி இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஜாக்குலின், உதவி ஆய்வாளர் சகுந்தலா, காவலர்கள் அக்னிராஜ், உதயகுமார், முனியசாமி, செந்தில்குமார், முத்துவீரு உள்ளிட்டோர் பிச்சைப்பிள்ளையேந்தலில் சோதனை நடத்தினர்.
அப்போது அய்யனார் (41) என்பவரது வீட்டில் 50 மூட்டைகளில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவை ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்து அய்யனாரை போலீஸார் கைது செய்தனர்.