தென்காசி | ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதியை கட்டிப்போட்டு 140 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 6 பேர் கைது

பாவூர்சத்திரம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் தனிப்படை போலீஸார்.
பாவூர்சத்திரம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் தனிப்படை போலீஸார்.
Updated on
1 min read

தென்காசி: பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையனூர், சிதம்பரநாடார் தெருவைச் சேர்ந்தவர் அருணா சலம் (88). இவரது மனைவி ஜாய் சொர்ணதேவி (83). இவர்கள் இருவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. அருணாசலம், ஜாய் சொர்ணதேவி ஆகியோர் தங்கள் மூத்த மகள் ராணியின் பரராமரிப்பில் வசித்து வருகின்றனர்.

வள்ளியூரில் பொதுப்பணித் துறையில் ராணி வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 30-ம் தேதி இரவு இவர், வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, கதவு திறந்து கிடந்துள்ளது. வீட்டுக்குள் அருணாசலம், ஜாய் சொர்ணதேவி ஆகியோர் வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில், கட்டி போடப்பட்டு இருந்தனர். கட்டை அவிழ்த்து விசாரித்தபோது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் சிலர், இருவரையும் கட்டிப் போட்டு, பீரோவில் இருந்த 140 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில் பாவூர்சத்திரம் போலீஸார் விசாரணை நடத் தினர். எஸ்பி கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், தனிப் படை அமைக்கப்பட்டு, கொள்ளை யர்களை தேடி வந்தனர்.

6 பேர் கைது

இந்நிலையில், ஆவுடையானூர் அருகே சந்தனகுமார்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன்(39), அவரது கூட்டாளிகள் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தைச் சேர்ந்த ஜான் விமல் சதீஷ்(34), சென்னை பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், கமல்ராஜ், பூந்தமல்லி நசரத்பேட்டையைச் சேர்ந்த வாஜாகத் அலி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நல்லு சாமி(42) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.3.59 லட்சம் பணம், 50 பவுன் நகையை மீட்டனர்.

மேலும், அவர்கள் பயன்படுத்திய 2 வாக்கி டாக்கி, கார், 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அருணாசலத்துக்கு சொந்த மான வணிக வளாகத்தில் மாரியப் பன் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். வாடகை பிரச்சினையில் கடையை காலி செய்துள்ளார். அருணாசலம் வீட்டில் கொள்ளை யடிக்க திட்டமிட்ட இவர், தனது நண்பரிடம் ஆலோசனை கேட்டுள் ளார். அந்த நண்பர், சிறையில் பழக்கமான திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை அறிமுகப் படுத்தி உள்ளார். அதன்படி, மாரியப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து இந்த கொள் ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in