Published : 13 Jul 2022 07:00 AM
Last Updated : 13 Jul 2022 07:00 AM
சென்னை: அண்ணா சாலையில் பைக்கில் வந்த சகோதரர்களிடமிருந்து ரூ.1.27கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ஜெகன் நேற்றுகாலை அண்ணாசாலை, சிந்தாதிரிப்பேட்டை பெரியார் சிலை அருகில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
காலை 9.30 மணியளவில் சுவாமிசிவானந்தா சாலை மற்றும் அண்ணாசாலை சந்திப்பு அருகில் ஒரே பைக்கில் 2 சூட்கேஸ்களுடன் வந்த 2 நபர்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, அவர்கள் இருவரும்முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து முதல்நிலை காவலர், அவர்கள் வைத்திருந்த சூட்கேஸ்களை பார்த்தபோது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது.
இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், சரியான விளக்கமும் கிடைக்காததால் காவலர் ஜெகன் திருவல்லிக்கேணி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீஸார் சம்பவ இடம் விரைந்து பிடிபட்ட 2 பேரையும் பணம் மற்றும்இருசக்கர வாகனத்துடன் திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் ராயப்பேட்டையைச் சேர்ந்த முத்தையா (43), அவரது தம்பி ராஜா (41) என்பதும், இவர்கள் கொண்டு வந்த சூட்கேஸ்களில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் பணம் வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், இவர்கள் சவுகார்பேட்டையில் பித்தளை பொருட்கள் கடை வைத்திருப்பதாக தெரிவித்தனர்.
இவர்கள் வைத்திருந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும்இல்லாத காரணத்தால், பிடிபட்டஇருவரும் வருமான வரித் துறைஅதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த பணம் ஹவாலா பணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT