

மானாமதுரை சீயோன் நகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி லிங்கநாதன் (40). இவரது மனைவி அங்கையற்கண்ணி (34). இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. லிங்கநாதன் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் ஜூலை 10-ம் தேதி கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அங்கையற்கண்ணி கணவர் லிங்கநாதன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். காயமடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணவரை எரித்துக் கொன்றதாக அங்கையற் கண்ணியை கைது செய்தனர்.