

வேடசந்தூர் அருகே காரில் கடத்தி வந்த 640 கிலோ குட்காவை போலீஸார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
வெளிமாநிலத்தில் இருந்து, திண்டுக்கல் மாவட்டத்துக்கு குட்கா கடத்தி வரப்படுவதாக மாவட்ட எஸ்.பி. வீ.பாஸ்கரனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி சோதனைச்சாவடியில் தனிப் படை எஸ்.ஐ. சேக் தாவூத் தலைமை யிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கிட மான வகையில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர். அதில் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து ராமநாதபுரத்துக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்திச் சென்றது தெரிய வந்தது.
காரில் இருந்த பெங்களூருவைச் சேர்ந்த அமர்பிரீத்சிங் (30) என் பவரை பிடித்து கூம்பூர் காவல் நிலையத்தில் தனிப்படை போலீ ஸார் ஒப்படைத்தனர். கூம்பூர் போலீஸார் கார் மற்றும் காரில் இருந்த 640 கிலோ குட்காவை பறிமுதல் செய்து அமர்பிரீத்சிங்கை கைது செய்தனர்.