

காஞ்சிபுரம்: பட்டப்பகலில் ஆயுதங்களுடன் இளைஞரை தாக்க முயன்ற 4 பேரை சிவகாஞ்சி போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் விஜய். இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் மடம் தெருவில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது காஞ்சிபுரம், தாயார்குளம் பகுதியைச் சேர்ந்த தியாகு (எ) தியாகராஜன், ஸ்ரீதர் (எ) குள்ள ஸ்ரீதர், குமரேசன் ஆகியோர் ஆயுதங்களுடன் சென்று பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் விஜய்யை தாக்க முயன்றனர். இது தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இ்ந்நிலையில் இந்த வழக்கில் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.