Published : 09 Jul 2022 06:44 AM
Last Updated : 09 Jul 2022 06:44 AM
காரைக்குடி: கானாடுகாத்தான் அரசு மருத்துவ மனையில் செவிலியர்களை அவதூறாக பேசியதாக திமுக பிரமுகர் மீது செட்டிநாடு போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி அருகே கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் உலகப்பன். சாக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகியாக உள்ளார். இவருக்கு கடந்த 4-ம் தேதி காலில் காயம் ஏற்பட்டது.
கானாடுகாத்தான் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு மிகவும் தாமதமாக சென்ற உலகப்பன், சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை செவிலியர்கள் தட்டிக் கேட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த உலகப்பன், செவிலியர்களை தரக்குறைவாகப் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவர்களை தாக்க முயன்றார். தனது செல்வாக்கை பயன்படுத்தி செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டினார்.
இது தொடர்பாக அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர், செட்டிநாடு போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT