

விழுப்புரம்: விழுப்புரம் கண்டமானடி போக்குவரத்து ஊழியர் நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி (66).
ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஓட்டுநரான இவர், விழுப்புரம் குபேர தெருவைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் (58), அவரது மகன் மகாவீர் சந்த் (29) ஆகியோரிடம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் சிறுக சிறுக மொத்தம் ரூ. 25 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
இதற்காக தேதி, தொகை குறிப்பிடாத காசோலை, முத்திரைத்தாள் என பல்வேறு ஆவணங்கள் கொடுத்துள்ளார். மேலும் மொத்த தொகை ரூ. 25 லட்சத்துக்கு, ரூ. 12 லட்சம் வட்டியும் கொடுத்துள்ளார்.
அசலும், வட்டியும் கொடுத்த பின்பு கந்தசாமி கொடுத்த ஆவணங்களை கொடுக்காமல், மேலும் ரூ. 4 லட்சம் கொடுத்தால்தான் ஆவணங்களை கொடுப்போம் என கூறியதாக, விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் ராஜேந்திரகுமார் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் ராஜேந்திரகுமார் மற்றும் மகாவீர் சந்த் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.