திருவாரூர் | பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்ஸோவில் கைது

திருவாரூர் | பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்ஸோவில் கைது
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் வடகரை யைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் அஜித்குமார் (21). இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் விருத்தாசலத்தைச் சேர்ந்த15 வயது சிறுமியுடன் பழகி வந்துள் ளார். இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.

மாண வியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த மாதம் 27-ம் தேதி மாணவியை ராதாகிருஷ்ணன் கடத்திச் சென்றார்.

மகள் திடீரென மாயமனதை யறிந்த பெற்றோர், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு, மாணவியை அஜித் குமார் கடத்தியதை உறுதி செய்து, அவரை தேடிபிடித்து நேற்று முன்தினம் போக்ஸோ பிரிவின் கீழ்கைது செய்து சிறை யில் அடைத்தனர். மாணவி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in