

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (53). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவன பணியாளரான இவர், வார இறுதி நாட்களில் மதபோதகம் செய்தும் வந்துள்ளார். நேற்று முன்தினம் மதபோதகம் தொடர்பாக ஒரு வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு 15 வயது சிறுமி மற்றும் அவரது தம்பி, தங்கைகள் மட்டுமே இருந்துள்ளனர். ஸ்டீபன் ராஜ் 15 வயது சிறுமியை அறையின் வெளியே வரவழைத்து, தங்கைகள் மற்றும் தம்பியை அறைக்குள் வைத்து வெளியே கதவை பூட்டியுள்ளார். பிறகு அந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு அருகில் வசிப்போர் சென்று, ஸ்டீபன் ராஜை பிடித்து செட்டிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஸ்டீபன் ராஜை கைது செய்தனர்.