

ராஜபாளையம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் 75 வயது முதியவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம் அருகே உள்ள இனாம்செட்டிகுளம் ஒத்தப்பட்டியைச் சேர்ந்தவர் குருசாமி(75). இவர் அப்பகுதியில் 2-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் உறவினர் ஒருவர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் முதியவர் குருசாமி மீது போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.