

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அக்ரஹாரம் தெருவைசேர்ந்தவர் ஆசிப் முகமது. இவரது மனைவியிடம் வடமாநிலத்தவர்கள் இருவர் தங்க நகைக்கு பாலிஷ் போட்டுதருவதாக கூறியுள்ளனர். இதை நம்பி அவர் செயினை கழற்றி கொடுத்துள்ளார்.
அழுக்குஎடுப்பதற்காக ஆசிட் ஊற்றிகழுவியதாக கூறப்படுகிறது. இதில் எடை குறைந்திருப்பதாக சந்தேகமடைந்து அந்த பெண் பரிசோதித்ததில், 2 கிராம் குறைந்திருப்பது தெரியவந்தது.இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தாராபுரம் போலீஸார் சென்று, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத்குமார் யாதவ் (38), சந்தன்குமார் (26) ஆகியஇருவரிடமும் விசாரித்தனர்.
இதில், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து, நகைக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி நூதன முறையில் தங்கத்தை திருடி வந்தது தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.