திருநெல்வேலி | மாயமான தொழிலாளி சடலம் மீட்பு

திருநெல்வேலி தச்சநல்லூரில் மாயமான தொழிலாளி மாயாண்டியை கண்டுபிடித்து தர வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அவரது உறவினர்கள்.
திருநெல்வேலி தச்சநல்லூரில் மாயமான தொழிலாளி மாயாண்டியை கண்டுபிடித்து தர வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அவரது உறவினர்கள்.
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்த மாயாண்டி(60) என்பவர் அங்குள்ள இறைச்சி கடையில் வேலை செய்துவந்தார். கடந்த 27-ம் தேதி கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தச்சநல்லூர் போலீஸில் புகார் செய்யப்பட்டது.

இந்நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தக் கோரி மாயாண்டியின் உறவினர்கள் தச்சநல்லூரில் மதுரை- திருநெல்வேலி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் தச்சநல்லூர் வேப்பங்குளம் வழியாக திருப்பிவிடப்பட்டன.

மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் சீனிவாசன், அனிதா உள்ளிட்டோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனிடையே தாழையூத்து வீட்டுவசதி வாரிய காலனி பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அழுகிய நிலையில் கிடந்த அந்த சடலத்தை போலீஸார் மீட்டனர். அவர் மாயாண்டி தான் என்பதை உறவினர்கள் அடையாளம் காட்டினர். அவர் எவ்வாறு இறந்தார் என்பது பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in