

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திருநாவலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சாட்சியம் அளித்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு, அப் போதைய முதல்வரின் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, முன்னாள் தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு தொடர்ந்தனர்
இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியி டம் குறுக்கு விசாரணை முடிந்துள்ள நிலையில், தற்போது அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை தொடங்கி, நடைபெற்று வருகிறது.
நேற்று நடுவர் புஷ்பராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகிய இருவரும் ஆஜராக வில்லை. அவர்களது தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, மனுதாக்கல் செய்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
தொடர்ந்து அரசு தரப்பு சாட்சியான கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சீனுவாசன்ஆஜராகி, சாட்சியம் அளித்தார்.இதனை நடுவர் பதிவு செய்து கொண்டார்.
அவரிடம், சிறப்பு டிஜிபி தரப்பு தொடர்ந்து குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து வரும் 4-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நடுவர், அன்றைய தினம் ஊர்க்காவல்படை ஏடிஜிபி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.