தீவிரவாதியுடன் தொடர்பு உள்ளதாக மிரட்டி 82 வயது மூதாட்டியிடம் ரூ.73 லட்சம் மோசடி

தீவிரவாதியுடன் தொடர்பு உள்ளதாக மிரட்டி 82 வயது மூதாட்டியிடம் ரூ.73 லட்சம் மோசடி
Updated on
1 min read

தானே: மகா​ராஷ்டிரா மாநிலம் தானே மாவட்​டத்​தின் கல்யாண் பகு​தியை சேர்ந்த 82-வயது மூதாட்​டி​யிடம் மோசடி நபர் ஒரு​வர் செல்​போனில் கடந்த 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை போலீஸ் அதி​காரி போல் பேசி​யுள்​ளார். அப்​போது மூதாட்​டி​யின் போன் எண் பஹல்​காம் தாக்குதல் தீவிர​வா​தி​யிடம் இருந்​த​தாக மிரட்​டி​யுள்​ளார்.

இந்த வழக்​கில் இருந்து மூதாட்​டியை விடுவிக்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்​தும்​படி கூறி​யுள்​ளார். மோசடி நபர் கூறிய வங்கி எண்​களுக்கு 73.3 லட்​சம் பணம் அனுப்​பி​யுள்​ளார் மூதாட்​டி. தொடர்ந்து பணம் கேட்​ட​தால் சந்​தேகம் அடைந்த மூதாட்டி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இதையடுத்து மோசடி நபரின் 5 செல்​போன் எண்​களைக் கண்​டு​பிடித்​து குற்​ற​வாளியை கைது செய்யும் நடவடிக்​கை​யில்​ போலீ​ஸார்​ இறங்​கி​யுள்​ளனர்​.

தீவிரவாதியுடன் தொடர்பு உள்ளதாக மிரட்டி 82 வயது மூதாட்டியிடம் ரூ.73 லட்சம் மோசடி
தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in