விருத்தாசலம் அருகே இளம்பெண் மீது துப்பாக்கிச்சூடு; மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

விருத்தாசலம் அருகே இளம்பெண் மீது துப்பாக்கிச்சூடு; மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
Updated on
1 min read

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே இளம்பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு மர்ம நபர்கள் சிலர் தப்பி ஓடியனர். பெண்ணில் இடுப்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டுகளை அகற்றிட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வலசை கிராமத்தைச் சேர்ந்த மணி இவரது மகன் காசிப்பிள்ளை(32) இவருக்கும் தொட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நிலவழகன் மகள் சாந்தகுமாரிக்கும் கடந்த 6 வருடம் முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் 2 மகன் ஒரு மகள் உள்ளனர். சாந்தகுமாரிக்கு கடந்த 3 மாதம் முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் காசிப்பிள்ளை அவரது மனைவி குழந்தை மற்றும் தாயுடன் அருகில் உள்ள அவர்களுடைய வயலில் கடந்த 40 வருடங்களாக வீடு கட்டி தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு காசிப்பிள்ளை தனது மனைவியுடன் வீட்டின் வெளியே அமர்ந்து உணவு அருந்தும் பொழுது அப்போது மோட்டார் சைக்கிளில் அவர்களை வீட்டை சுற்றி வந்த மர்ம நபர்கள் திடீரென நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது வெளியில் இருந்த சாந்தகுமாரி மீது இடுப்பில் குண்டு பாய்ந்தது. அப்போது வீட்டில் இருந்த அவரது தாய் கருப்பாயி மற்றும் அக்கா சுமதி அனைவரும் வெளியே வந்து பார்க்கும்போது ரத்தவெள்ளத்தில் சாந்தகுமாரி கீழே மயங்கி விழுந்தார்.

பின்னர் வெளியில் வந்து கருப்பாயி பார்க்கும் போது ஒரு நபர் நெற்றியில் லைட் கட்டிக் கொண்டு அவர்கள் வீட்டை நோக்கி வெளிச்சம் அடித்துக்கொண்டிருந்தது தெரிந்து அவர்களை காசிப்பிள்ளை துரத்தி பிடிக்க ஓடும் பொழுது அவர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்.

பின்னர் ரத்த வெள்ளத்தில் இருந்த சாந்தகுமாரியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு போதிய சிகிச்சை அளிக்காதனால் அவரை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு சாந்தகுமாரி தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இடுப்பில் இருக்கும் குண்டுகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in