

சென்னையில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலைபகுதியை சேர்ந்த மணிகண்டன்(33) 5 கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும்கஞ்சா விற்பனை செய்ததற்காகவும், உள்ளகரம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்த முருகன்(34) திருட்டு வழக்குநிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் திருடியதற்காகவும் கடந்த 22-ம் தேதி குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
வள்ளுவர் கோட்டம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன்(29) மீதான 16 வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையில், மீண்டும் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டதால் திருவான்மியூர் போலீஸாரால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதேபோல், அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாரதிதாசன்(22), வியாசர்பாடி அன்னை சத்யா நகரை் சேர்ந்தஅருண்(32) மற்றும் ஜோதீஸ்வரன்(30), மாம்பலத்தைச் சேர்ந்தஇளையராஜா(35), தி.நகரைசேர்ந்த பொன்ராஜ்(36) ஆகியோரும் திருட்டு, ஆவண மோசடி மற்றும் வழிப்பறி செய்தது தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இப்படி ஒருவாரத்தில் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளனர்.