வேலூர் | காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

வேலூர் | காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது
Updated on
1 min read

வேலூர்: வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பஜார் வீதியில் சிலர் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக விரிஞ்சிபுரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் உதவி ஆய்வாளர் ரவி மற்றும் காவலர்கள் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டனர். அங்குள்ள ஒரு கடையில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் காட்டன் சூதாட்டத்துக்காக பணம் கட்ட வந்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்த வெங்கடேசன் (51), பிரகாஷ் (29), கணபதி (26) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.4,600 பணம் மற்றும் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய இரண்டு நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

காவல் துறையினர் வந்தபோது தப்பி ஓடிய ஒருவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவழகன் என்றும், காட்டன் சூதாட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர் என்பதும் தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in