Published : 22 Jun 2022 06:13 AM
Last Updated : 22 Jun 2022 06:13 AM

கந்து வட்டியால் தற்கொலை முயற்சி: திண்டிவனத்தில் வட்டி வசூலித்தவர் கைது

விழுப்புரம்: திண்டிவனம் அருகே பாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (43). கூலித்தொழிலாளியான இவர்,தனது மகளுடைய திருமணத் திற்காக, வெண்மணியாத்தூர் அருகேயுள்ள நடுவனந்தல் பகுதியில் வசிக்கும் ஆனந்தராஜ் என் பவரிடம், ஓராண்டுக்கு முன் ரூ. 5ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

அந்தப் பணத்தை தருவதற்கு நீண்ட நாட்கள் ஆனதால் ஆனந்த ராஜ், வட்டியுடன் சேர்த்து, ரூ. 50 ஆயிரம் தரும்படி, கதிர்வேலுவிடம் கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கதிர்வேல், திண்டிவனம் நகரில் உள்ள அடமானக்கடையில் தான் அடகு வைத்த இரண்டு சவரன் நகையை மீட்டுள்ளார்.

இதையறிந்த ஆனந்தராஜ், அங்கு வந்து, கதிர்வேலுவிடம் தகராறு செய்ததோடு, கொலை மிரட்டல் விடுத்து, பணத்திற்கு பதிலாக அந்த இரண்டு சவரனை பிடுங்கி சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த கதிர்வேல், தற்கொலை செய்ய முடிவெடுத்து ‘எலி பேஸ்ட்’ சாப்பிட்டு, மயங்கி விழுந்தார்.

அவரை திண்டிவனம் போலீஸார் மீட்டு, அப்பகுதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத் துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து கதிர்வேல், திண்டிவனம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் கொலை மிரட்டல், கந்து வட்டி வசூலித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தராஜை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x