

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(31). பொறியியல் பட்டதாரி. 2018-ம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்துள்ளார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ராஜபாளை யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து போக்ஸோ வழக்கில் ராஜேஷ்குமாரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. நேற்று நடந்த வழக்கின் விசாரணையின்போது ராஜேஷ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிபதி பரிந்துரைத்தார்.