Published : 20 Jun 2022 06:00 AM
Last Updated : 20 Jun 2022 06:00 AM

காட்பாடி | மர்மமான முறையில் உயிரிழந்த ரியல் எஸ்டேட் அதிபர்; கொலையில் முழு விசாரணை நடத்தப்படும்: காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தகவல்

சரவணன்.

காட்பாடி: புதுச்சேரியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வேலூரில் மர்மமான முறையில் உயிரிழந் துள்ளார். அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தவுடன் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத் தப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் (51). இவர், தமிழகம் முழுவதும் நிலங்களை வாங்கி அதனை வீட்டுமனையாக பிரித்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக, அவர் ‘சரவணா ரியல் எஸ்டேட் குரூப் ஆப் கம்பெனி’ ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், வேலூர் மாவட் டத்தில் உள்ள ஒரு இடத்தில் நிலத்தை சரவணன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த இடத்துக்கான பணத்தை சரவணன் வழங்கியும், இடத்தை அவருக்கு தராததால் கொடுத்த பணத்தை திருப்பி வாங்க சரவணன் வேலூர் வந்தார்.

காட்பாடி பகுதியில் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த சரவணன், நிலம் தொடர்பாக விருதம்பட்டு பகுதியில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரை சந்தித்து பேச நேற்று முன்தினம் சென்றார். அங்கு அரசியல் கட்சி பிரமுகர் மற்றும் சிலருடன் சரவணன் பேசி விட்டு அதன் பிறகு வெளியே வந்தார்.

அப்போது அதே கட்டிடத்தின் கீழே சரவணன் வாயிலும், மூக்கிலும் ரத்தம் கசிய மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும், விருதம்பட்டு காவல் துறையினர் அங்கு சென்று ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

புதுச்சேரி எம்எல்ஏ மனு

இந்நிலையில், சரவணன் மரணம் குறித்து தகவல் அறிந்ததும், புதுச்சேரியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன் மற்றும் சிலர் நேற்று வேலூர் வந்தனர். பிறகு சரவணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அவர் புகார் மனு ஒன்றை அளித்தார்.

இதனைத்தொடர்ந்து, செய்தி யாளர்களிடம் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன் கூறியதாவது, ‘‘காட்பாடியைச் சேர்ந்த சிலர் புதுச்சேரி ரியல் எஸ்டேட் அதிபர் சரவணனிடம் நிலம் தருவதாக கூறி பணத்தை வாங்கியுள்ளனர். நிலம் தராததால் கொடுத்த பணத்தை அவர் திருப்பி கேட்டபோது காட்பாடி வருமாறு கூறினர். இதை நம்பி சரவணன் காட்பாடிக்கு வந்தார்.

இரவு முழுவதும் துன்புறுத்தல்

காரில் வந்த அவரை கார் ஓட்டுநர் ஒரு இடத்தில் இறக்கி விட்டு வேறொரு இடத்துக்கு சென்றுள்ளார். விருதம்பட்டில் அவரை இரவு முழுவதும் ஒரு கும்பல் துன்புறுத்தி அவரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதில், அரசியல் கட்சி பிரமுகருக்கு தொடர்பு இருப்பதால் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்த முன்வரவில்லை’’ என்றார்.

இதனைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் விருதம்பட்டு காவல் நிலையத்துக்கு நேற்று வந்தார். அங்கு ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் கொலை வழக்கில் காவல் துறையினர் நடத்தி வரும் விசாரணை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கூறும்போது, ‘‘ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் மர்மமான முறையில் டால்பின் டவர்ஸ் பில்டிங்கில் உயிரிழந்து கிடந்ததாக வந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அங்கு சென்று உடலை கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சரவணன் உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு உரிய விசாரணை நடத்தப்படும். அறி வியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் முழுமையான விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x