சென்னையில் 3 பெண்களிடம் ரூ.35 லட்சம் மதிப்பு அமெரிக்க டாலர் பறிமுதல்

சென்னையில் 3 பெண்களிடம் ரூ.35 லட்சம் மதிப்பு அமெரிக்க டாலர் பறிமுதல்
Updated on
1 min read

சென்னையில் இருந்து இலங்கைசெல்ல இருந்த 3 பெண்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.34.76 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் கைப்பற்றப்பட்டது.

சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் விமானம் நேற்று புறப்படத் தயாராக இருந்தது. பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர்.

அப்போது திருச்சியைச் சேர்ந்த லட்சுமி கந்தசாமி, கனகவல்லி, திண்டுக்கல்லை சேர்ந்த மாரியம்மாள் ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களது கைப்பைகளை சோதனை செய்தபோது, அதில் ரூ.34.76 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் இருந்தது.

முறையான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அவர்களது பயணத்தை ரத்து செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in