

கும்பகோணம்: கும்பகோணம் கும்பேஸ்வரர் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் ராமநாதன்(65). இவர், 2020-ம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மனவளச்சேரி கிராமத்தில் உள்ள டீ கடையில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது, அங்கு 16 வயது சிறுமியை ராமநாதன் பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கேரளா மாநில போலீஸாரால் ராமநாதன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை முடிவதற்குள் ராமநாதன் கேரள மாநிலத்தில் இருந்து கும்பகோணத்துக்கு வந்து, தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, ராமநாதனைப் பிடித்து ஆஜர்படுத்த கேரள நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கும்பகோணத்தில் ராமநாதன் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பதையறிந்த கேரள போலீஸார் நேற்று கும்பகோணத்துக்கு வந்து, மேற்கு காவல் ஆய்வாளர் பேபி மற்றும் போலீஸார் உதவியுடன் ராமநாதனைக் கைது செய்து, கேரளத்துக்கு அழைத்துச் சென்றனர்.