குன்னூர் | மேலூர் ஊராட்சி தலைவர் தற்கொலை முயற்சி

குன்னூர் | மேலூர் ஊராட்சி தலைவர் தற்கொலை முயற்சி
Updated on
1 min read

குன்னூர்: குன்னூர் ஊராட்சி ஒன்றியம் மேலூர் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த கே.சி.ரேணுகாதேவி (48) உள்ளார். இந்த ஊராட்சியில் திமுக உறுப்பினர்கள் 12 பேரும், அதிமுக உறுப்பினர்கள் 3 பேரும் உள்ளனர்.

இந்நிலையில், ஊராட்சி தலைவர் ரேணுகா தேவி நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிக் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் ரேணுகாதேவி கூறும்போது, "மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் நாகராஜ், எப்போதும் என்னிடம் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். முதல்வரின் நீலகிரி வருகைக்காக ரூ.50 ஆயிரம் செலவு செய்துள்ளேன். எனவே, ஏதாவது ஒரு வகையில் ரசீது போட்டு தாருங்கள் என்று நெருக்கடி கொடுத்தார். இதனால், மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றேன்" என்றார்.

துணைத் தலைவர் நாகராஜ் கூறும்போது, "ஊராட்சி தலைவருக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்கவில்லை. சாலை அமைப்பது தொடர்பாக ரூ.2.75 லட்சம் முறைகேடு செய்துள்ளார் என்பதை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகபெற்றோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புடைய அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். முறைகேட்டில் ஈடுபட்டதை திசை திருப்புவதற்காக எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்" என்றார்.

இதுதொடர்பாக கொலக்கம்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in